சிவகார்த்திகேயன் – அதிதி நடிக்கும் மாவீரன் படத்தின் ஓடிடி உரிமை வாங்கிய முன்னணி நிறுவனம்!

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் .சிவகார்த்திகேயனின் அடுத்த பெரிய படமான மாவீரன் தற்போது படப்பிடிப்பில் உள்ளது.

இதில் திரைப்பட தயாரிப்பாளர் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார், துணை நடிகர்கள் சரிதா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மாவீரன் அறிவிப்பு டீஸர் சிவகார்த்திகேயனை ஒரு புதிரான முறையில் அறிமுகப்படுத்திய பிறகு ரசிகர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்றது.

சமீபத்தில் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 3-ம் தேதி சென்னையில் துவங்கியது. அதன் பிறகு சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் ஒரு ஷெட்யூல் படமாக்கப்பட்டது. சாந்தி டாக்கீஸ் பதாகையின் கீழ் அருண் விஸ்வா தயாரிக்கயுள்ளது.

siva karthikeyan - 5

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அதிதியின் ரோல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவர் பத்திரிக்கையாளராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மண்டேலா போல இந்த படத்திலும் ஒரு சமூகம் சார்ந்த கருத்து உடைய படமாக மடோன் அஸ்வின் உருவாக்கலாம் அந்த வாய்ப்பு அதிதிக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமலுக்கு போட்டியாக சம்பளத்தை உயர்த்திய ரஜினி! அடுத்த படத்தில் பிரம்மாண்ட சம்பளமா?

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் ஓடிடி ரைட்ஸை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 34 கோடி ரூபாய்க்கு அமேசான் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment