பெரும் சிக்கலுக்கு பின் ரிலீஸான ‘டாக்டர்’: சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சி டுவிட்!
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு இந்த படத்தின் ரிலீஸ் தேதி திடீரென சிக்கல் ஏற்பட்டதால் படக்குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘டாக்டர்’ பட தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த படத்தின் ரிலீசுக்கு சிக்கல் ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அந்த பிரச்சனையை தீர்க்க முன் வந்த சிவகார்த்திகேயன், தனது சம்பளத்திலிருந்து பெரும்பகுதியை குறைத்துக் கொள்வதாகவும் அதுமட்டுமின்றி தனது சொந்த பணத்திலிருந்து சில கோடிகளை அவர் இந்தப் பிரச்சனையை தீர்க்க கொடுத்து உதவி செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
சிவகார்த்திகேயன் எடுத்த முயற்சி காரணமாகவே இன்று அதிகாலை ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது என்பதும் ரிலீசான இடங்களில் படம் பார்த்தவர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே..எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடி???? #DoctorInTheatres from today????????????????watch it,enjoy it with your friends and family❤️???????????? pic.twitter.com/14VWXFRnsE
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 8, 2021
