சிவாஜி போட்ட தப்புக்கணக்கால் கன்னடத்திற்குச் சென்ற சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் தமிழில் நடித்த நடிகர் திலகம்!

ஒரு நடிகர் என்பவர் தான் வளர்ந்து வரும் கால கட்டங்களில் ஒரு படத்தினை ஹிட் படமாகக் கொடுத்துவிட்டபின் அவரின் அடுத்த படத்தினையும் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். மேலும் அந்தப் படத்தின்மூலம் அவர்களுக்ககென ஒரு இமேஜும் உருவாகியிருக்கும். இவ்வாறு நடிகர்கள் தாங்கள் அடுத்தடுத்து நடிக்கும் ஒவ்வொரு கதையையும் மிக கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து ஹிட் கொடுப்பார்கள்.

அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் புகழின் உச்சியில் இருக்கும் போது வேண்டாம் என ஒதுக்கிய கதையானது கன்னடத்தில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது. தனது தவறான முடிவை உணர்ந்த சிவாஜிகணேசன் மீண்டும் அந்தப் பட ரீமேக்கில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

அவ்வாறு நடிகர் திலகம் தவறவிட்ட அந்தப் படம்தான் ‘அவன்தான் மனிதன்‘. எழுத்தாளர் ஜி.பாலசுப்ரமணியன் சிவாஜிக்காகவே இந்தக் கதையை எழுதியிருக்கிறார். பின்னர் அந்தக் கதையை நடிகர் திலகம் கேட்டு இப்போது நான் நன்கு வளர்ந்த நேரம். இந்தப் படத்தில் வருவது போன்ற சோகமான முடிவை என் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அந்தக் கதையை நிராகரித்திருக்கிறார்.

கஸ்தூரி ராஜா 12 வருடமாக உருவாக்கிய கதைக்கு 2 மணி நேரத்தில் உயிர் கொடுத்த இளையராஜா..

பின்னர் இந்தக் கதையை கன்னடத்தில் சூப்பர் ஸ்டரான ராஜ்குமார் கேட்டு  பிடித்துப் போய் ‘கஸ்தூரி நிவாச‘ என்ற திரைப்படமாக உருவாகி அதில் நடித்துள்ளார். எழுத்தாளர் நினைத்தது போலவே படம் கன்னடத்தில் சக்கைப் போடு போட்டுள்ளது. இதனை அறிந்த சிவாஜி கணேசன் தான் எடுத்த தவறான முடிவை உணர்ந்து இதன் ரீமேக் உரிமையைப் பெற்று மறுபடியும் தானே நடித்துள்ளார்.

ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் ‘அவன் தான் மனிதன்‘ என்ற பெயரில் உருவான இந்தப் படத்தில் சிவாஜியுடன், ஜெயலலிதா, மஞ்சுளா, முத்துராமன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கான பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

மேலும் சிவாஜி-மஞ்சுளா டூயட் பாடல் சிங்கப்பூர், மலேசியாவில் படமாக்கப்பட்ட போது கண்ணதாசன் இந்தப் பாடலை மலாய மொழியில் ஆரம்பிக்கலாமே என்று யோசித்து மலாய்-தமிழ் அகராதியை வாங்கி அதில் ஜெனிதா-வனிதா என்ற பொருள்படும்படியான வார்த்தைகளை எடுத்து ஒரு பாடலைக் கொடுத்திருப்பது சிறப்பம்சம் ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...