மறைந்த சிவாஜி கணேசனின் சொத்துக்கள் முறையாக பிரிக்கப்படவில்லை என்றும் குறிப்பாக வீடுகளின் வாடகை பாக்கி என்பது தங்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்று அவர்களுடைய மகள்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்று தொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் சொத்துக்களை தங்களுக்கு சமமாக உரிமை இருப்பதால் தங்களுக்கும் உரிய சமமான பங்கு வேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தனர். இந்த வழக்கின் விசாரணையானது இன்று வந்தது.
அப்போது சிவாஜி மகள்கள் மீது வாதாடிய வழக்கறிஞர் 1999-ல் எழுதப்பட்ட உயில் என்பது 2021-ஆம் ஆண்டுதான் வெளிவந்ததாக கூறினார். அதோடு உயிலானது ஜோடிக்கப்பட்டதாக சிவாகியின் மகள்கள் வாதாடினர்.
இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என நடிகர்கள் ராம்குமார், பிரபு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.