சூர்யாவிற்க்காக பாலிவுட் ஹீரோயினை களமிறக்கும் சிறுத்தை சிவா !

கார்த்தி நடித்த சிறுத்தை படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் சிவா. விக்ரமகுடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்தான் சிறுத்தை என்றாலும் மிக அருமையாக அந்த படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தார். அதை தொடர்ந்து அஜீத்தின் மூன்று படங்களை இவர் இயக்கியதால் மிக வேகமாக பிரபலமடைந்தார்.

தற்போழுது நடிகர் சூர்யா இயக்குனர் சிவாவுடன் இணையவுள்ளதாக தகவல் வந்துள்ளது. சூரரைப் போற்று,ஜெய் பீம் ,எதற்கும் துணிந்தவன் வெற்றி படத்திற்கு பிறகு, இயக்குனர் பாலா உடன் கூட்டணியுள் இணைத்துள்ளார் சூர்யா.படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது . ஆனால் தற்சமயம் இந்த படம் திரைக்கதை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

surya7 1595480830

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் கூட வெளியானது.தற்போழுது பாலா படத்தில் நடிக்காததால் சிவாவுடன் மீண்டும் இணைந்துள்ளார் சூர்யா.

செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் பத்து டோலிவுட் படங்கள் !

photos 164648192780

படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே தான் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு பதில் பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானியை ஒப்பந்தம் செய்துள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நடிகர் சூர்யா உடன் முதன்முறையாக ஜோடி சேர உள்ளார் திஷா. மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment