புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி நீர்த்தேக்கத்தின் நிலவரம் !

கடந்தாண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான ஏரிகள் நிரம்பின. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளில் நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புழல் ஏரியில் நேற்று 629 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 235 கனஅடியாக சரிந்துள்ளது.

புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1000 கன அடியிலிருந்து 687 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியிலிருந்து தற்போது 3,139 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக 151 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியில் 265 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 265 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு தற்போது 853 மில்லியன் கனஅடியாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 495 கனஅடியாக குறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 687 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3429 மில்லியன் கன அடியாக உள்ளது.

பூண்டி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து 1117 கன அடியாக காணப்படுகிறது. வினாடிக்கு 1117 கனஅடி நீர் வந்து கொண்டே உள்ளது. பூண்டியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் 744 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் நீர் இருப்பு 3118 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment