சித்தார்த்தின் கொடூர பதிவு- காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டிப்பு சாய்னாவுக்கு ஆதரவு

கரூர் லோக்சபா தொகுதி எம்பி  ஜோதிமணி. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் மோடி எதிர்ப்பு எப்போதும் இவரிடம் அனல் பறக்கும்.

சமீபத்தில் பிரதமர் பஞ்சாப் சென்றிருந்தபோது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஆதரவளித்து சாய்னா நோவல் போட்ட டுவிட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என சித்தார்த் போட்ட ஆபாச டிவிட்டால் மகளிர் அமைப்புகள் அனைத்தும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் சாய்னா நோவலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜோதிமணி கூறியுள்ளதாவது நம் எல்லோரையும் போல சாய்னா நெய்வாலுக்கும் தனது அரசியல் கருத்துக்களை சொல்லும் உரிமை இருக்கிறது.

அவருடைய கருத்தோடு முரண்பட்டால் நாகரிகமான முறையில் பதில் கருத்து சொல்லலாம்.விமர்சிக்கலாம்.

அவர் பெண் என்பதாலேயே பாலியல் ரீதியான தாக்குதலை தொடுப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

என ஜோதிமணி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment