வசமாக மாட்டிக்கொண்ட சித்தார்த்- பேட்மிண்டன் வீராங்கனையை ஆபாசமாக விமர்சித்ததால் மகளிர் அமைப்புகள் கொதிப்பு

தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். சித்தார்த் தற்போது அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக எதிர்த்து வருபவர்.

இதனால் இவரது மோடி எதிர்ப்பு  எழுத்துக்கு அதிக சர்ச்சை ஏற்பட்டதுண்டு இவரை கைது செய்ய வேண்டும் என்று கூட பாரதிய ஜனதாவினர் அடிக்கடி இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு.

தற்போது சித்தார்த் ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளார்  பேட்மிட்டன் வீராங்கணை  சாய்னா நோவாலை இழிவுபடுத்தியுள்ளதாக பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளார் சித்தார்த்.

பிரதமரின் பஞ்சாப் பயணம் பாதுகாப்பில்லாமல் அமைந்தது குறித்து சாய்னா நோவல் பிரதமருக்கே பாதுகாப்பில்லை என்றால் எப்படி என்று பிரதமருக்கு ஆதரவாக எழுத அதற்கு எதிர்வினையாற்றிய சித்தார்த் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் வரை சென்று விட்டது. சிவசேனா எம்பி பிரியங்கா திரிவேதி உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சித்தார்த் மீது பல்வேறு இடங்களில் பாஜகவினர் புகார் கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும் ,சித்தார்த் தான் சொன்னவற்றை தவறாக புரிந்து கொண்டுள்ளதாக டுவிட் இட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment