Connect with us

அண்ணன் மகளுக்கு 18 டயர் லாரியில் சீர்வரிசை செய்த சகோதரிகள்!!!

seervarisai

Tamil Nadu

அண்ணன் மகளுக்கு 18 டயர் லாரியில் சீர்வரிசை செய்த சகோதரிகள்!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தாய்மார்களின் சீர்வரிசைகள் பலரையும் வியக்க வைப்பதாக காணப்படுகிறது. ஏனென்றால் அவர்கள் சீர்வரிசை என்ற பெயரில் பிரம்மாண்ட செலவுகளை செய்கிறார்கள்.

இருப்பினும் கூட தமிழகத்தில் இது வாடிக்கையாக மாறிவிட்டது. இந்த நிலையில் தற்போது அண்ணனின் மகள் விஷயத்தில் சகோதரிகள் செய்த சீர்வரிசை தாய்மார்களே மிஞ்சும் அளவிற்கு காணப்பட்டுள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டம் கீழ் வீதியில் வசித்து வந்தவர் முருகன். அவர் சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் மறைந்த முருகனின் சகோதரிகள் சுமார் 500 சீர்வரிசைகள் கொண்ட பொருட்களை கொண்டு வந்தனர்.

அதுவும் அண்ணனின் ஆசைப்படி 2000 பேருக்கு அங்கு உணவு அளிக்கப்பட்டது. இந்த சீர்வரிசை பொருட்கள் அனைத்தும் சுமார் 18 டயர்கள் கொண்ட லாரியில் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த வீடியோ தற்போது அனைவரையும் கவர்ந்து உள்ளதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top