கள்ளக்காதல் விவகாரம்; கொழுந்தனார் மீது கொதிக்க, கொதிக்க சுடு எண்ணெய்யை ஊற்றிய அண்ணி!

கள்ளக்காதல் விவகாரத்தில் கொழுந்தனார் மீது சுடவைத்த எண்ணெய் ஊற்றிய அண்ணி கைது செய்யப்பட்டுள்ளார். சுட வைத்து எண்ணெயை ஊற்றும் அளவுக்கு நடந்த சம்பவம் எண்ண..

ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம், 5-வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது பெரியம்மா மகன் பூபதி இவர் அருகே உள்ள மீனாட்சி கல்யாண மண்டபம் வீதி பகுதியில் தனது மனைவி மீனாதேவியுடன் வசித்து வருகிறார்.

பூபதி, கார்த்திக், மீனாதேவி ஆகிய மூவரும் கல்லூரி நண்பர்கள், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூவரும் ஒன்றாக படித்துள்ளனர். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது பூபதியும் மீனாதேவியும் காதலித்துடன் தொடர்ந்து அவர்கள் திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.

கார்த்தித்திற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை, ‌ இதற்கிடையே மீனாதேவிக்கும் கார்த்திக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில் பூபதி வீட்டில் இல்லாத நேரம் கார்த்திக் மீனாதேவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்துள்ளார்,

இந்நிலையில் நேற்று மீனாதேவி வீட்டிற்கு வழக்கம்போல் கார்த்திக் சென்றுள்ளார், அப்போது தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் மீனா தேவியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது,

அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது, ஒரு கட்டத்தில் வாய் தகராறு முற்றிய நிலையில் மீனாதேவி, கார்த்திக் மீது திரவம் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து ஊற்றியுள்ளார்,

இதில் அலறி துடித்த கார்த்திக் உடனடியாக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று தன் மீது ஏதோ திரவம் ஊற்றபட்டதாகவும் தனக்கு சிகிச்சை அளிக்குமாறும் கூறியுள்ளார்.

மருத்துவமனை ஊழியர்கள் பார்த்தபோது தலை மற்றும் உடல், கருகி காணப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர் ஈரோடு தனியார் மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர். உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து போலீஸார் கார்த்திக்கிடம் விசாரணை செய்தனர், அதில் திருமண பந்தத்தை மீறிய உறவில் தனது அண்ணன் மனைவி மீனாதேவி தன் மீது ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி விட்டதாக கூறியுள்ளார், தொடர்ந்து மீனாதேவியை அவரது அம்மாவின் வீட்டில் (கருங்கல்பாளையம், ஈரோடு) வைத்து கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில்,

கார்த்திக் நேற்று மதியம் தனது வீட்டிற்கு வந்ததாகவும் அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் அந்த ஆத்திரத்தில், (கார்த்திக் வீட்டிற்கு வருவதற்கு முன்பு தான் ரேஷன் கடையில் இருந்து வாங்கி வந்த பாமாயில் எண்ணெயை சுடவைத்து வைத்திருந்துள்ளார் ) சமையல் அறைக்கு சென்று சுடவைத்த பாமாயில் எண்ணெய் எடுத்து வந்து கார்த்திக் மீது ஊற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மீனாதேவி மீது வழக்கு பதிவு செய்த பவானி போலீசார் அவரை நள்ளிரவில் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அதிகாலை கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.