Entertainment
தம்பியை இயக்கிய சிவா இப்போ அண்ணனையும் இயக்குகிறார்
கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த படம் சிறுத்தை. விக்ரமகுடு என்று தெலுங்கில் வந்த இப்படம் தமிழில் சிறுத்தையானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. காரணம் அதிரடி ஆக்சன் ப்ளஸ் காமெடி காட்சிகள்.

இதை இயக்கியவர் சிவா அதன் பின் சிறுத்தை சிவா என அழைக்கப்பட்டார். இப்படத்தில் நடித்ததன் மூலம் கார்த்திக்கு மிகப்பெரிய அதிரடி நாயகன் அந்தஸ்து கிடைத்தது.
சூர்யா, கார்த்தியின் உறவினரான குடும்ப நிறுவனம் போல் உள்ள ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
அதன் பின் 9 வருடங்களாக தொடர்ந்து அஜீத் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா முதன் முறையாக முதல் பட நாயகன் கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் இணைகிறார். இப்படத்தை சிவாவின் முதல் தமிழ் படத்தை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்கிறது. இதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
