சூர்யா படத்தின் கதை குறித்து செம தகவல் சொன்ன இயக்குனர் சிவா!

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்தப் படம் மூன்று நாட்களில் சுமார் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

’அண்ணாத்த’ திரைப்படத்திற்கு ஒரு சில விமர்சகர்கள் நெகட்டிவ் விமர்சனம் தந்த போதிலும் குடும்பம் குடும்பமாக அந்த படத்திற்கு திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சிறுத்தை சிவாவின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் புரமோஷன் விழாவில் சூர்யாவுக்காக தயார் செய்த கதை குறித்து சிறுத்தை சிவா கூறியுள்ளார்.

சூர்யாவுக்காக செம கதை ஒன்று வைத்துள்ளதாகவும் சூர்யாவுடன் பணிபுரிய மிகவும் ஆவலுடன் ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சூர்யா நடித்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் சூப்பராக இருந்தது என்றும் இரண்டு மிகச் சிறந்த படங்கள் மிகச் சிறந்த இயக்குனர்கள், மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சூர்யாவுக்காக சூப்பரான கதை ஒன்றை வைத்துள்ளேன் என்று இயக்குனர் சிறுத்தை சிவா கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment