தீவிரமடைந்தது உக்ரைன்-ரஷ்யா யுத்தம்! வான் தாக்குதலுக்கான எச்சரிக்கைக்கான சைரன் ஒலிப்பு!!
ரஷ்யா உக்ரேன் போர் மூன்றாவது உலகப் போருக்கு வித்திடும் என்று நிபுணர்கள் பலரும் கருத்து கூறிக்கொண்டு வருகின்றனர். அந்த அளவிற்கு ரஷ்யா உக்ரேன் மீது அதிதீவிரமாக போர் புரிந்து கொண்டு வருகிறது. 7வது நாளாக தொடர்ந்து ரஷ்யா உக்ரேனில் போர் புரிந்து கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. அதன்படி தலைநகர் கீவ், கார்விக், செர்னிகிவ் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. கிவ், கார்விக் உள்ளிட்ட நகரங்களை முற்றுகையிட்டு ரஷ்ய படைகள் தாக்குதல் செய்து கொண்டு வருகின்றன.
இதனால் வான்தாக்குதல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செர்னிகிவ் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து வான்தாக்குதல் எச்சரிக்கைக்கான சைரன் ஒலிப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
கிஸ் ஓப்லாஸ்ட், டினிப்ரோ உள்ளிட்ட நகரங்களில் வான் தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிப்பதால் பதற்றம் நிலவுகிறது. செர்னிகிவ்,சுமி உள்ளிட்ட இடங்களிலும் வான் தாக்குதல்களை ஒலிப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. வான் தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிப்பதால் நிலவறைகளில் உக்ரேனியர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
