சிறந்த தொண்டு எது?! நாயன்மார்களின் கதை

e10517dc51b3960f7df540cf3fae091b-1

அடியாருக்கு தொண்டு செய்வது இறைவனுக்கு தொண்டு செய்தாற்போல என இந்து மதம் சொல்கிறது. இதை பின்பற்றி வரலாற்றில் நீங்கா பெயரினை பெற்றவர் பலர். அந்த வரிசையில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து நாயன்மார்களின் வரிசையில் இடம்பெற்ற அப்பூதியடிகள் பற்றிதான் இன்றைய நாயன்மார்கள் கதை வரிசையில் பார்க்கப்போகின்றோம்.

சிவனும், சிவனடியார்களும் வெவ்வேறல்ல என உலகுக்கு உணர்த்தும் திருவிளையாடலை இனி பார்ப்போம்.

அந்நாளைய சோழநாட்டில் திங்களூரில் பிறந்து வாழ்ந்து வந்தர்வதான் இந்த அப்பூதியடிகள். திருநாவுக்கரசர் வாழ்ந்த காலத்தில் இவரும் வாழ்ந்து வந்தார். அப்பூதியடிகள்  சிவன்மேல் பக்தி கொண்டபோதிலும்,  திருநாவுக்கரசரின் சிவபக்தியினைக் கண்டு அவர்பால் மிகுந்த பக்தியும், மரியாதையும், காதலும் கொண்டார். அதனால், திருநாவுக்கரரசரின் பெயரால் அன்ன சத்திரம், நீர் பந்தல், மோர் பந்தல் மற்றும் சிவகைங்கர்யம் செய்து வந்தார். அதுமட்டுமல்லாது தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அவரைப்போலவே அவர் மனையாளும், குழந்தைகளும் திருநாவுக்கரசர் மேல் பற்று கொண்டனர்.

திருநாவுக்கரசர் ஒருமுறை அப்பூதியடிகள் ஊரான திங்களூருக்கு வந்தார். தன் பெயரால் அப்பூதியடிகள்  நடத்தும் சிவ கைங்கர்யங்களை கேள்விப்பட்டு அப்பூதியடிகளை சந்திக்க சென்றார். தன்னை இன்னாரென அடையாளப்படுத்திக்கொள்ளாமல், பாடுபட்டு சேர்த்த பணத்தில் உங்கள் பெயரில் தர்மம் செய்யாமல் திருநாவுக்கரசர் பேரால் ஏன் செய்கிறீர்கள்?! இப்பொழுது பாருங்கள் தானம் பெற்றவர்கள் திருநாவுக்கரசரை வாழ்த்தி செல்கின்றனர் என வினவினார்.

90154844897aa7920b54c29af0277644

அதற்கு அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து சிவனருளால் சைவமதத்தை தழுவி அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார். இறைபக்தியைவிட சிவனுக்கு தொன்றாற்றும் அடியார்கள்மீது அன்பு செலுத்துவது மேன்மையானது. அதனால்தான், தான் திருநாவுக்கரசர்பால் அன்பு கொண்டுள்ளதாக  உரைத்தார்.   அதன்பின், சிவன் ஆட்கொள்ள நினைத்து சூலைநோய் தந்த அடியேன் தான்தான் என அடையாளப்படுத்திக்கொண்டார் திருநாவுக்கரசர். கடவுளாய் நினைத்து வழிப்படும் திருநாவுக்கரசரே தன் இல்லம் நாடி வந்திருப்பதைக் கண்டு உளம் மகிழ்ந்து தன் வீட்டில் உணவருந்தி செல்ல வேண்டி நின்றார். அப்பூதியடிகளின் அன்பை கண்டு நெகிழ்ந்து திருநாவுக்கரசரும் அவர் வேண்டுகோளுக்கிணங்கி உணவருந்தி செல்ல சம்மதித்தார்.

மனையாளிடம் சென்று திருநாவுக்கரசரின் வருகையை சொல்லி அறுசுவை உணவை சமைக்க சொன்னார். மூத்த திருநாவுக்கரசையும், இளைய திருநாவுக்கரசையும் அழைத்து அம்மாவுக்கு உதவி செய்ய பணித்து, திருநாவுக்கரசரிடம் அப்பூதியடிகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.

e5c93234bce5c6b625aab08f66962de8-1

அடுப்படியில் அவரது மனையாள் நல்ல சுவையான உணவை செய்து முடித்து தன் மூத்த மகன் மூத்த திருநாவுக்கரசை அழைத்து கொல்லைப்புறத்திற்கு சென்று திருநாவுக்கரசர் அமுதுண்ண வாழையிலையை நறுக்கி வரச்சொன்னாள். திருநாவுக்கரசருக்கு தன்னாலும் சிறு தொண்டாற்ற வாய்ப்பு கிடைத்ததே என்ற உற்சாகத்தில் வாழை இலையை நறுக்கிக்கொண்டிருந்தான். அங்கு வாழைமரத்தில் சுற்றிக்கொண்டிருந்த பாம்பு மூத்த திருநாவுக்கரசின் கரங்களில் தீண்டியது. பாம்பின் விஷம் ஏறும்முன் தாயின் கட்டளையை நிறைவேற்றும்பொருட்டு வேகவேகமாய் தாயிடம் சென்று வாழை இலையினை தந்து சுருண்டு விழுந்து இறந்தான். அன்னம் தயாராகிவிட்டதா என தெரிந்துக்கொள்ள அடுப்படிக்கு வந்த அப்பூதியடிகள் இதைக்கண்டு திகைத்து நின்றார்.

dd5bcef56471af832c514178331e9086-1

மகன் இறந்த துக்கத்தை காட்டிலும் இவ்விஷயம் தெரிந்தால் திருநாவுக்கரசர் திருஅமுது செய்யமாட்டாரே என மலைத்து நின்று, தன் மகனின் சடலத்தை மற்றொரு அறையில் கிடத்தி துணிகளால் மறைத்து, திருநாவுக்கரசரை திருஅமுது செய்ய அழைத்தார். திருநாவுக்கரசருக்கு பாதபூஜை செய்து மனையில் அமரச்செய்து மனையாளை பரிமாறச் செய்து தானும், இளைய திருநாவுக்கரசும் அருகே நின்றிருந்தனர். உணவருந்தும்முன் அனைவருக்கும் திருநீறு அளித்தார். மூத்த திருநாவுக்கரசை காணாமல்,  அப்பூதியடிகளே! தங்கள் மூத்த மகன் மூத்த திருநாவுக்கரசு எங்கே!? அவனையும் அழையுங்கள். எல்லாரும் சேர்ந்து உண்ணலாம் என அழைத்தார். அவன் கல்விச்சாலை சென்றுள்ளார் என பொய்யுரைத்தார். திருநாவுக்கரசர் மனதில் ஏதோ இடறியது. சரி, யாரையாவது அனுப்பி மகனை அழைத்துவர சொல்லுங்கள் என பணித்தார். ’அவன் எனக்கு உதவான்” என சொல்லி நின்றார். மகனை அழைத்து வந்தால் திருஅமுது செய்வேன் என கடிந்தர்.

இனியும்  பொய்யுரைக்க முடியாதென உணர்ந்த மூத்த திருநாவுக்கரசு பாம்பு தீண்டி இறந்ததை சொல்லி, சுவாமி! தங்கள் அடியேனது இல்லத்தில் திருஅமுது செய்யும் பாக்கியத்தை இழந்தேனே என தொழுது அழுதார். தான் வந்த வேளையில் இப்படியாகிவிட்டதே என வருந்தி மூத்த திருநாவுக்கரசின் உடலை சுமந்துக்கொண்டு சிவன் குடியிருக்கும் கோவிலுக்கு சென்றார்.  விசயம் கேள்விப்பட்டு அவர்கள் பின் ஊரே திரண்டு கோவிலுக்கு சென்றது.

திங்களூர் உரையும் பெருமானை அப்பூதியடிகளும், அவர்தம் குடும்பமும் உருகி வேண்ட, திருநாவுக்கரசர்

 ஒன்று கொ லாமவர் சிந்தை யுயர்வரை 

ஒன்று கொ லாமுய ரும்மதி சூடுவர் 

ஒன்று கொலாமிடு வெண்டலை கையது 

ஒன்று கொலாமவ ரூர்வது தானே

என பதிகம் பாட    அனைவரின் வேண்டுதலும், திருநாவுக்கரசரின் பக்தியிலும் மனமிறங்கிய இறைவன்  மூத்த திருநாவுக்கரசை உயிர்பித்தார். தூக்கத்திலிருந்து எழுந்தவனாய் தாய் தந்தை, திருநாவுக்கரசரை பணிந்து நின்றான். ஊர்மக்கள் திருநாவுக்கரசரின் பெருமையை போற்றி வணங்கி நின்றனர். திருநாவுக்கரசர் அப்பூதியடிகள் இல்லத்திற்கு சென்று அனைவருடனும் திருஅமுதுண்டு, அப்பூதியடிகளின் மனங்குளிர அங்கேயே சிலநாட்கள் தங்கி இருந்தார். அதன்பின் பல்லாண்டுகாலம், அப்பூதியடிக  திருநாவுக்கரசரின் பெருமையை பறைச்சாற்றி இறைவனடி சேர்ந்தார்.

Naappuud i

அப்பூதியடிகளின் குருபூஜை தைமாதம் சதயம் நட்சத்திரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படுது.

நாயன்மார்களின் கதை தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews