சிறகடிக்க ஆசை நாயகன் வெற்றி வசந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்… உருக்கமாக இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட வெற்றி வசந்த்…

விஜய் டிவியின் தொடர்களில் பிரபலம் வாய்ந்தது மற்றும் டிஆர்பி யில் முதலிடம் பிடித்த தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடரின் நாயகனாக சின்னத்திரையில் அறிமுகமானவர் வெற்றி வசந்த். தனது எதார்த்தனமான நடிப்பினால் இந்த தொடர் ஆரம்பித்த சில நாட்களிலேயே தனக்கென ரசிகர்களைப் பெற்றார்.

இந்த நிலையில், வெற்றி வசந்தின் பிறந்தநாளான நேற்று, சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பு செட்டில் இவரது பிறந்தநாளை இந்த தொடரின் குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அதற்கு நன்றி தெரிவித்து அந்த விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் வெற்றி வசந்த்.

அதற்குப் பின்பு, அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாவில் அவரது ரசிகர்கள் பலர் வெற்றி வசந்த் போட்டோவை வைத்து எடிட் செய்து போஸ்ட் செய்திருந்தனர். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக உருக்கமாக உங்கள் அளவில்லா அன்பிற்கு நன்றி என்று வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பது என்னவென்றால், என் பெயரை வைத்து நிறைய போஸ்ட்கள், ஸ்டோரீஸ் ஷேர் பண்ணிருந்தீங்க, எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி, சில எடிட்கள் என்னை கண்கலங்க வைத்துவிட்டது, பிரமிக்கவும் வைத்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு எல்லாருக்கும் பதில் அனுப்பி கொண்டிருக்கிறேன்.

எப்போவுமே நான் நம்புற ஒரு விஷயம், எதாவது ஒரு விஷயம் நடக்கணும் நெனச்சு, அதை நம்பி அதற்கான வேலையைச் செஞ்சா கண்டிப்பா அது நடக்கும். அது மாதிரி நான் ஒரு ஆர்டிஸ்டாக, கலைஞனாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக வேலை செஞ்சிட்டு இருந்தபோது என்னை நம்பினது ஒரு சில பேர் தான். ஆனால் இன்று என்னைத் தாண்டி பல லட்சம் பேர் என்னை நம்புகிறார்கள், வாழ்த்துகிறார்கள்.
அது என்னை மிகவும் பாசிட்டிவாக பீல் பண்ண வச்சது.

எப்போதும் என் வாழ்க்கையில் நாளைக்கு பிறந்தநாள் அப்டினா இன்னிக்கு தா நியாபகம் வரும். ஆனா என்னுடைய ரசிகர்கள் மார்ச் 1 ஆம் தேதியில் இருந்தே கவுண்டவுன் போட்டு எடிட் பண்ணி போட ஆரம்பிச்சிட்டாங்க. இதெற்கெல்லாம் என்ன செய்ய போறேன்னு தெரியல. என்னால் முடிந்த அளவுக்கு வேலையில் இன்னும் கவனம் செலுத்தி தினமும் உங்களை சந்தித்து விடுகிறேன். உங்கள் எல்லாருடைய அளவுகடந்த அன்பிற்கு மிக்க நன்றி என்று கூறி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவிட்டிருந்தார் வெற்றி வசந்த்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.