Connect with us

ஜூலை 1-ம் தேதி முதல் இதற்கு தடை: வெளியானது அப்டேட்!!

Plastic

செய்திகள்

ஜூலை 1-ம் தேதி முதல் இதற்கு தடை: வெளியானது அப்டேட்!!

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஒன்றிய அரசு சுற்றுச்சூழல், தட்பவெட்ப மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தயாரித்தல், இறக்குமதி செய்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை கூடாது என தெரிவித்துள்ளது.

இவை குறைவான பயன்பாடு மற்றும் அதிகப்படியான மாசு ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதன் படி பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், அலங்கார வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் தெர்மாகோல் ஆகியவைகளுக்கு முற்றிலும் தடை என தெரிவித்துள்ளது..

ஏற்கனவே கடந்த ஆண்டு செம்டம்பர் 30-ஆம் தேதி முதல் 75 மைக்ரான் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் 120 மைக்ரான் கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக சுற்றுசூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து பொதுமக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த தடை முற்றிலுமாக நிறைவேற்றப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top