
தமிழகம்
ஒற்றைத் தலைமை விவகாரம்: 4-வது நாளாக ஓபிஎஸ் ஆலோசனை!!
சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த விவகாரம் மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக நேற்று சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை செயலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வருவதற்குமுன் பொதுக்குழு கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
பின்னர் ஓபிஎஸ் தலைமையில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், செம்மலை, பொன்னையன், ஜே.சி.டி. பிரபாகரன் , ஆர்.பி. உதயகுமார் மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் இன்று 4-வது நாளாக சென்னையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. மேலும், இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
