
Tamil Nadu
ஒற்றை தலைமை ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை-ஜெயக்குமார்;
இன்று காலை முதலே அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானம் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இறுதி கட்ட கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
மேலும் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூட்டம் முடிந்த பின்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளரை சந்தித்து பரபரப்பாக பேட்டி அளித்துக்கொண்டிருக்கிறார்.
ஒத்தையா? இரட்டையா? என்பதை தலைமை கழகம் அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று கூறினார். தீர்மானம் கூட்டம் என்பது 12 குழு உறுப்பினர்களை உள்ளடக்கியதுதான் என்றும் கூறினார்.
மேலும் கூட்டத்தில் தீர்மானம் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்; பன்னீர்செல்வம் பங்கேற்றார் என்றும் கூறினார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பது அவசியமில்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.
ஒற்றை தலைமை என தாம் கூறியது சிதம்பர ரகசியம் கிடையாது அது அதிமுக தொண்டர்கள் விருப்பம் என்று கூறினார். ஒற்றை தலைமை என தாம் கூறியதில் எந்த தவறும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
