பிக் பாஸ் பிரதீப் ஆண்டனியை குடும்பத்துடன் சென்று சந்தித்த பாடகர் யுகேந்திரன்…

புகழ்பெற்ற பின்னணி பாடகரும் கனீர் என்ற குரலுக்கு சொந்தக்காரரான மலேசியா வாசுதேவனின் மகன் தான் யுகேந்திரன் வாசுதேவன் ஆவார். இவரும் தனது தந்தையைப் போலவே பின்னணி பாடகரும், நடிகரும் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார் யுகேந்திரன்.

‘ரோஜாவனம்’ திரைப்படத்தில் ‘பொள்ளாச்சி சந்தையிலே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து பிரஷாந்த் நடித்த ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தில் ‘பார்த்தேன் பார்த்தேன்’ பாடலை பாடியதன் வாயிலாக பிரபலமானார். பரத்வாஜ், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா போன்ற பல முன்னணி இசையப்பாளர்கள் உடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார்.

அதுமட்டுமல்லாது நடிகராக ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘பகவதி’, ‘திருப்பாச்சி’, ‘மதுர’, ‘முதல் கனவே’ போன்ற திரைப்படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை பெற்றார். சமீபத்தில் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 இல் போட்டியாளராக கலந்துக் கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதே பிக் பாஸ் சீசன் 7 இல் பிரதீப் ஆண்டனியும் போட்டியாளராக கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை பரபரப்பாக்கினார். சக போட்டியாளர்களால் குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப் படுவதற்கு முன்னதாகவே யுகேந்திரன் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுவிட்டார். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பிரதீப் ஆண்டனி உடன் நல்லதொரு நட்பில் இருந்தார் யுகேந்திரன்.

பிரதீப் ஆண்டனி குற்றம் சாட்டப்பட்ட போதிலும் அவர் அப்படி செய்திருக்கமாட்டார் என்று ஆணித்தனமாக பிரதீப்பிற்கு ஆதரவு அளித்தார் யுகேந்திரன். நிகழ்ச்சி முடிந்த பிறகும் பிரதீப் உடன் தொடர்பில் இருந்தார் யுகேந்திரன். இந்நிலையில் தற்போது, தனது மனைவி மற்றும் அம்மாவுடன் பிரதீப் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார் யுகேந்திரன். அதை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் யுகேந்திரன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...