Entertainment
சிபிசிஐடி போலீசார் என்னை மிரட்டினார்கள்: பாடகி சுசித்ராவின் அதிர்ச்சி டுவீட்

சிபிசிஐடி போலீசார் தன்னை மிரட்டியதால்தால்தான் சாத்தான்குளம் வீடியோவை டெலிட் செய்ததாக பாடகி சுசித்ரா தனது டுவிட்டரில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சாத்தான்குளம் தந்தை மகன் ஆகிய இருவர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த வழக்கை நடத்தி வந்த சிபிசிஐடி தற்போது சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்துள்ளது. சிபிஐ இன்று முதல் இந்த வழக்கை ஏற்று நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த விவகாரம் முதலில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதற்கு பாடகி சுசித்ராவின் வீடியோவே காரணம். அவரது வீடியோவுக்கு பின்னரே பல திரையுலக பிரபலங்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த வீடியோவை 20 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் நேற்று சிபிசிஐடி போலீசார் விடுத்த அறிக்கையில் பாடகி சுசித்ராவின் வீடியோவை யாரும் நம்பவேண்டாம் என்றும் அதில் போலியான கருத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து பாடகி சுசித்ரா அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்
இதுகுறித்து இன்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்தபோது ’சிபிசிஐடி போலீசார் அந்த வீடியோவை நீக்கும்படி மிரட்டினார்கள் என்றும், நீக்கவில்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறியதால் எனது வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்று அந்த வீடியோவை நீக்கி உள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த வழக்கை மக்கள் உற்று கவனிக்க வேண்டும் என்றும் இதில் பல பொய்யான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாடகி சுசித்ராவின் இந்த டுவிட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
