
செய்திகள்
‘புடுச்சி ஜெயில்ல போடுங்க சார்’… பயில்வான் ரங்கநாதன் மீது பிரபல பாடகி பரபரப்பு புகார்!
பிரபல பின்னணி பாடகி சுசித்ரா பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
தமிழ் சினிமாவில் பல பாடல்களைப் பாடியிருக்கிறார் சுசித்ரா. இவர் பிரபல திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் கடந்த மார்ச் மாதம் தனியார் யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் தன்னைப்பற்றி மிக அவதூறாகவும், போதைப் பழக்கத்துக்கு அடிமையானவள் என்றும் , பாலியலில் ஆர்வமுள்ளவர் எனவும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை ஆபாசமான கருத்துகளையும் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் பரப்பி வருவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து தன்னைப் பற்றி பரப்பி வரும் அவதூறான கருத்துக்களால் சினிமா துறையில் பாடல் வாய்ப்புகள் குறைந்து தன்னுடைய வருமானம் பூஜ்ஜியத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு சான்றாக கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட ஐடி ரிட்டர்ன்ஸ் பார்த்தாலே தெரியும் என கூறியுள்ளார்
மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய டுவிட்டர் பக்கம் ஒரு சில நபர்களால் ஹேக் செய்யப்பட்டு சுச்சி லீக்ஸ் விவகாரம தொடர்பாக புகார் அளித்ததாகவும். அந்தப் புகார் தொடர்பான போலீஸ் விசாரணையின் போது நடிகர் தனுஷ் , வெங்கட்பிரபு ராஜா, மற்றும் கார்திக் குமார் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக அப்போது தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்போது பயில்வான் ரங்கநாதனும் இந்த பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்
