வேண்டுமென்றே கொரோனாவை வரவழைத்து கொண்ட பிரபல பாடகி.. அதிர்ச்சி தகவல்

சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஒருவர் வேண்டுமென்றே கொரோனா வைரஸ் பாதிப்பை தனக்கு வரவழைத்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இதனால் நாட்டில் உள்ள பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் அதி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தியை மறைத்து வருகின்றன என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சீன நாட்டின் பாடகி ஒருவர் தனக்குத்தானே கொரோனா வைரஸ் நோயை வரவழைத்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் என்பது அனைவரும் பயப்படும் அளவுக்கு கொடிய நோய் அல்ல என்றும் அதனால் எனக்கு நானே வரவழைத்துக்கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது நான் அதிகமாக தண்ணீர் குடித்தேன் என்றும் எந்த விதமான மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் வைட்டமின் சி மட்டும் அதிகமாக எடுத்துக் கொண்டேன் என்றும் ஓரிரு நாளில் நான் குணமாகிவிட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.