
பொழுதுபோக்கு
பாட்டி வயசுல இது தேவையா…. கிண்டலடித்த மருத்துவருக்கு பாடகி சின்மயி நெத்தியடி பதில்!!
கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. இந்நிலையில் அன்று முதல் காதல் ஜோடிகளாக வலம் வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் செய்துகொள்ள முடிவெடித்தனர்.
இதனிடையே கடந்த ஜூன் 9 கோலிவுட், ஹாலிவுட் சினிமா துறையை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கோலாகலமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர்கள் திருமணம் நடைபெற்றது.
இவர்களது திருமணத்திற்கு பாலிவுட், கோலிவுட்டில் முக்கிய நகரங்களாக விளங்கும் ஷாருக்கான், ரஜினி, கமல் போன்றவர்களுக்கு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஏற்கனவே இவர்களது திருமணம் திருப்பதியில் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சென்னையில் நடைப்பெற்றது.
இந்த சூழலில் இவர்களது திருமணம் குறித்து மருத்துவர் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டாரின் நடிப்பிற்கு மதிப்பு தருவதாகவும் இருப்பினும் பாட்டி வயசுல (40 வயது) குடும்பம், குழந்தை என அவர் எடுத்த இந்த முடிவு தேவையா என பதிவிட்டுள்ளார். அதோடு நயன்தாராவிற்கு குழந்தை பிறப்பதற்கு டெஸ்ட் டியூப் பேபி சென்டரை நம்புவதாக கிண்டலாக பதிவிட்டிருந்தார்.
இதனைப்பார்த்த பாடகி சின்மயி, மருத்துவக் கல்லூரிகளில் பாலினப் பாகுபாடு மற்றும் பெண் மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பாலினச் சார்பு குறித்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம் என கூறினார். அப்போது இந்த பதிவை அவருக்கு அனுப்பியபோது இந்த அற்புதமான மருத்துவர் உடனடியாக இந்த மோசமான கருத்தை விட்டுவிட்டார் என பதிவிட்டுள்ளார்.
We happened to be speaking about sexism in Medical colleges and the gender bias female doctors, surgeons face on my Instagram page and I got this sent this.
A female actor gets married and this amazing doctor immediately leaves this crappy comment. pic.twitter.com/A4rwGyCd30— Chinmayi Sripaada (@Chinmayi) June 12, 2022
