தமிழில் நடித்து அசத்திய வெளிநாட்டு நடிகை.. பாரதிராஜாவின் அறிமுகப்படுத்திய ஆர். வரிசை ஹீரோயின்

கடந்த சில, பல ஆண்டுகளுக்கு முன் ஏதேனும் ஒரு நடிகை புதுமுகம் என்றால் பத்திரிக்கைகளில் மும்பை வரவு, கொல்கத்தா வரவு, மலையாள தேசத்து நடிகை என அண்டை மாநிலங்களைக் கொண்டுதான் அவர்களுக்கு அறிமுகம் கொடுப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் சாதித்த கதநாயகிகள் ஏராளம்.

அதேபோல் தமிழ்நாட்டிலிருந்து பாலிவுட் சென்று கொடிகட்டிப் பறந்த நடிகைகளும் பலர் உள்ளனர். ஆனால் வெளிநாட்டிலிருந்து நேரடியாக தமிழ் படத்தில் அதுவும் இயக்குநர் இமயத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகைதான் ரஞ்சனி.

இப்போதுள்ள எமி ஜாக்சன் லண்டன் இறக்குமதி. அதேபோல் 2010 களில் பிஸியாக நடித்த பூஜா இலங்கை இறக்குமதி. அப்படி சிங்கப்பூரில் இருந்து வந்த நடிகை தான் சாசா செல்வராஜ். பல கதாநாயகிகளுக்கு தன்னுடைய அக்மார்க் எழுத்தான ரா வரிசையில் பெயர் வைக்கும் பாரதிராஜா இவருக்கும் ரஞ்சனி என்ற பெயர் வைத்தார்.

ரஞ்சனியும் சோடை போகவில்லை. இவரை எளிதாக அடையாளம் காண வேண்டுமென்றால் இன்றளவும் தினமும் ஏதேனும் ஓர் மூலையில் இவரது பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்…’ என்ற முதல் மரியாதை படப் பாடல். அந்தப் படத்தில் இவர் நடித்த செவுலி கதாபாத்திரம் மனதை விட்டு நீங்காதது.

தன்னையும் அறியாமல் பாடல் பாடும் போது கண்கலங்கிய பி.சுசீலா.. காரணம் இதுதானா?

இந்த ஒரே பாடல் அவரை தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிரபலப்படுத்த தமிழைக் காட்டிலும் மலையாளத்தில் பிஸியானார். அதுவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். ரஞ்சனி தொடர்ச்சியாக பல தமிழ்ப் படங்களிலும் நடித்தார். அவற்றில் கடலோரக் கவிதைகள், மண்ணுக்குள் வரைம், குடும்பம் ஒரு கோவில், சகலகலா சம்பந்தி, தாய்மேல் ஆணை, பரிசம் போட்டாச்சு போன்ற படங்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தாய்க்குலங்களின் ஆதரவினைப் பெற்றது.

மலையாளத்தில் இவர் நடித்த முதல் படமான சுவாதி திருநாள் தேசிய விருதைப் பெற்றது. இதனால் ரஞ்சனியை கேரளத்தில் தூக்கிக் கொண்டாடினார்கள். இவ்வாறு தமிழ் சினிமாவிலும், மல்லுவுட்டிலும் தொடர்ந்து ஒரு பத்து ஆண்டுகள் தனி ராஜ்ஜியத்தையே நடத்தியிருக்கிறார் ரஞ்சனி. தற்போது 55 வயதாகும் ரஞ்சனி தொழிலதிபராக இருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...