சிங்கம் படம்னா போலீஸ் நல்லவங்க, ஜெய்பீம் படம்னா போலீஸ் கெட்டவங்க! என்னங்க சார் உங்க சட்டம்?

சில நாட்களாக நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் பற்றி செய்திகள் வெளியாகிக் கொண்டு வருகின்றன. குறிப்பாக ஜெய்பீம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் காணப்படும் காலண்டர் வன்னியர் சமுதாயத்தை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ராதாரவி

இதற்காக சூர்யாவிற்கு பல மிரட்டல்கள் வந்தன. இந்த நிலையில் இதுகுறித்து ராதாரவி படத்தின் பெயரை கூறாமல் பேசியுள்ளார். அதன்படி இன்று ப்ளூ சட்டை மாறன் நடிப்பில் உருவாகியுள்ள ஆண்டி இந்தியன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் கலந்துகொண்ட ராதாரவி சூர்யா பற்றி சில சுவாரசியமான தகவலை கூறினார். சிங்கம் 1,2,3 இப்படி மூன்று படங்களிலும் நடிகர் சூர்யா போலீசாக நடித்துள்ளார்.

அப்படிப் பார்த்தால் அந்த திரைப்படத்தை பார்க்கும் போது போலீஸ்காரர்கள் அனைவரும் நல்லவர்கள் இன்று போல் தோன்றுகிறது. ஆனால் ஜெய்பீம் திரைப்படத்தில் போலீஸ்காரர்கள் செய்கின்ற கொடுமை தெரிந்தது.

அதனால் ஒரு படத்தை திரையரங்கில் பார்க்கும் போது அதை படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் பிடித்தால் நல்லா இருக்குது இல்லையென்றால் நன்றாக இல்லை என்று சொல்லிவிட வேண்டும் அவ்வளவுதான் என்றும் நடிகர் ராதாரவி இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment