‘AIRBUS’ நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்த சிங்கப்பூர் நிறுவனம்…! எத்தனை விமானங்கள் தெரியுமா?
தற்போது உலகமெங்கும் கொரோனாவின் பரவல் மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வருகிறது. இதனால் பொருளாதார நிலையானது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. இந்த நிலையில் ஏர்பஸ் நிறுவனத்திடம் சுமார் 80 விமானங்கள் வாங்க சிங்கப்பூர் நிறுவனம் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவின் பரவல்க்கு முன்பே விமானப் போக்குவரத்துத் துறையில் பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் நொடிப்பு நிலையை அடைந்தன. இதனையும் தாண்டி ஒரு சில நிறுவனங்கள் தற்போது வரை இயங்கிக் கொண்டு வருகிறது.
கொரோனாவின் சூழலில் விமானப் போக்குவரத்து தடையால் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு உள்ளாயின. கொரோனாவின் பரவல் குறைந்ததால் பன்னாட்டு விமான போக்குவரத்து மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் பீஓசி ஏவியேசன், ஏர்பஸ் நிறுவனத்திடம் a320 நீயோ வகையில் 80 விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் பீஓசி ஏவியேசன் நிறுவனத்தின் விமான போக்குவரத்து சேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
