பிரபல பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி திருமணம் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் முன்னிலையில் சினேகன் – கன்னிகா ரவி திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் அவர்களில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினேகன் – கன்னிகா ரவிதிருமணத்திற்கு வருகை தந்திருந்த கமலஹாசன் திருமணத்தை நடத்தி வைத்து தம்பதிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் போட்டியாளரும் பாடலாசிரியருமான சினேகன் கடந்த சில ஆண்டுகளாக கன்னிகா ரவியை காதலித்து வந்தார் என்பதும் தற்போது இரு தரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னர் நடிகை கன்னிகா ரவி தொடர்ந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.