வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேறிய சிந்து; மூன்று முறை மோதியும் படுதோல்வி!!

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே பிடபிள்யூஎஃப் உலக டூர் பைனல்ஸ் நடைபெற்றது. இது பேட்மிட்டன் போட்டிக்கான தொடர் ஆகும்.இதில் இந்தியாவில் சார்பில் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து, ஸ்ரீகாந்த், லக்ஷயா சென் போன்ற விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

பி.வி. சிந்து

ஆனால் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிவி சிந்து படுதோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்த இறுதிப் போட்டியில் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த சியோங்யை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் கேம்மில் 21-16 என்ற கணக்கில் சியோங் வென்றார். இரண்டாவது கேள்வியிலும் சியோங் கையே ஓங்கி இருந்தது.

இதனால் அந்த கேம்மையும் 21 12 என்ற கணக்கில் அவர் கைப்பற்றினார். இதன் மூலம் 40 நிமிடங்களில் மட்டும் 21-16, 21-12 என கணக்கில் சியோங் போட்டியை வென்றார். அதோடு தங்கப்பதக்கத்தையும் வென்றார்.

இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பிவி சிந்து மூன்று முறை சியோங்க்கு எதிராக மோதி,  சியோங்  மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் இரண்டாவது முறையாக சியோங்கிடம் பிவி சிந்து தோல்வியடைந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment