சிம்மம் வைகாசி மாத ராசி பலன் 2023!

மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும். சிம்ம ராசியினைப் பொறுத்தவரை கல்வி சார்ந்த உங்களின் எதிர்காலக் கனவுகள் நிறைவேறும் காலமாக இருக்கும். மாணவர்கள் மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று தங்களுக்குப் பிடித்தமான கல்லூரிகளில் இடம் பெறுவர்.

வேலைவாய்ப்புரீதியாக எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். 12 ஆம் இடத்தில் செவ்வாய் பகவானும் சுக்கிர பகவானும் சேர்ந்து இருப்பதால், குடும்ப வாழ்க்கையில் குளறுபடிகள் ஏற்படும்.

கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் பெரும் பிரச்சினைகளாக வெடிக்கும். குழந்தைகளை மனதில் கொண்டு நிதானித்துச் செயல்படுவது நல்லது.

வீடு, மனை சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்ய நினைப்போர் தயங்காமல் முயற்சிக்கலாம். மேலும் வண்டி, வாகனங்கள் ரீதியான மாற்றங்களையும் செய்யலாம். கட்டுமானப் பணி முடியாமல் கிடப்பில் கிடந்த நிலையில் அந்தப் பணிகள் தற்போது விறுவிறுவென நடந்தேறும்.

ஆடம்பரச் செலவுகளை அதிக அளவில் செய்வீர்கள், இதனால் வீண் கடன்கள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் சுற்றுலா சென்று வருவீர்கள்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தாயின் உடல் நலனில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படும். பொருளாதார ஏற்றம் மிகச் சிறப்பாக இருந்தாலும் விரயச் செலவுகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சிதம்பர் நடராஜப் பெருமானை வழிபட்டு வந்தால் நடக்கும் அனைத்தும் நன்மையில் முடியும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews