சிம்மம் தை மாத ராசி பலன் 2023!

சனியின் பார்வை சிம்ம ராசியின் மீது விழுவதால் கெட்ட பெயரினைச் சம்பாதிக்கும் காலமாக இருக்கும். அதனால் பேசும்போதும், எந்தவொரு செயலைச் செய்யும் போதும் ஒருமுறைக்கு இருமுறை கவனமாகச் செயல்படுதல் நல்லது.

5 ஆம் இடத்தில் இருக்கும் சூர்யன் 6 ஆம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்வதால் ஆரோக்கியம்ரீதியாக எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும். தாயின் உடல் நலன்ரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும்.

வண்டி, வாகனங்கள் ரீதியான வீண் செலவுகள் ஏற்படும். சுக்கிரன் 7 ஆம் இடத்திற்கு வருவதால் வேலைரீதியாக எடுத்துக் கொண்டால் வேலைப் பளு மிகுதியாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் அவப் பெயர் ஏற்பட வாய்ப்புண்டு.

மேல் அதிகாரிகளுடன் மனக் கசப்பு ஏற்படும். சரியான தூக்கமின்மை, அலைச்சல் போன்றவற்றால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். புதன் 5 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆவதால் பண வரவு சிறப்பாக இருக்கும்.

தொழில்ரீதியாக சுய தொழில் செய்வோருக்கு வராக் கடன்கள் வந்து சேரும், தொழிலை அபிவிருத்தி செய்ய பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்விரீதியாக சிறப்பாகச் செயல்படுவர். உயர் கல்விக்குப் படிப்போர் சிறிது தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.