சிம்மம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

சிம்மம் சுபகிருது வருட பலன்கள்

எதிலும் உத்வேகத்துடன் செயல்படக்கூடிய சிம்மம் ராசி அன்பர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.

தன்னம்பிக்கை குறைந்து பிரச்சினைகளை சமாளிக்க கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் தரும் நிகழ்வுகள் நடைபெற்றாலும் உங்கள் மனதில் சஞ்சலம் நீடிக்கும்.

வாக்குக் கொடுக்கும்போது கவனம் செலுத்துதல் வேண்டும், கடைபிடிக்க முடியாமல் போய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். உடன் பிறப்புகளால் செலவுகள் ஏற்படும், மேலும் உடன் பிறப்புகளால் பிரச்சினைகள் எழுக்கூடும்.

பெற்றோர் உடல் நலனில் சிறப்பாக மேம்பட்டு இருப்பர். இடம் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

புதிதாக கடன் வாங்குவோர் முடிந்தளவு கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது, இல்லையேல் கூடுதல் கவனம் செலுத்துதல் நல்லது. கணவன்- மனைவி இடையேயான புரிதல் மேம்படும். தற்போதைக்கு புதிய தொழில் எதையும் துவங்க வேண்டாம்.

பெற்றோர் உடனான மனக் கசப்புகள் ஏற்படும். பணி சார்ந்து அதிக விஷயங்களில் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.  பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.