சிம்மம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022!

6 ஆம் இடத்தில் சனி வக்ரம், 8 ஆம் இடத்தில் குரு வக்ரம், 2 ஆம் இடத்தில் புதன் வக்ரம், சிம்மத்தில் சூரியனும் சுக்கிரனும், செவ்வாய் 10 ஆம் இடத்திலும், 9 ஆம் இடத்தில் ராகு உள்ளது.

கிரகங்களின் இடம் சிம்மத்திற்கு உகந்த மாதமாக இருக்கும். சூரியன் ஆட்சியில் இருப்பதால் 17 ஆம் தேதி வரை நீங்கள் மகிழ்ச்சியுடனும் பலம் மிகுந்து காணப்படுவீர்கள்.

வேலைவாய்ப்பு ரீதியாக எடுக்கும் புதிய முடிவுகள் அனைத்தும் வெற்றியினைக் கொடுக்கும். பதவி உயர்வு, வேலை ரீதியாக பாராட்டுகள், வேலையில் பளு குறைந்து காணப்படுவதால், சம்பள உயர்வு என அமோகமாக வாழ்க்கை இருக்கும்.

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன் – மனைவி இடையே கார சாரமான விவாதங்கள் சண்டைக்கு இட்டுச் சென்றாலும் சிங்கம்போல் கர்ஜித்து பிரச்சினையைக் கையாள்வீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் குறித்த தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குழந்தைகள் கல்வி நலனில் மேம்பட்டுக் காணப்படுவார்கள்.

காதலர்கள் மத்தியில் தேவையில்லாத சண்டை ஏற்படும், மேலும் பணம் கொடுக்கல் வாங்கலில் பல பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். தாய் தந்தை வழியான பூர்விகச் சொத்துகள் கிடைக்கப் பெறும். மேலும் தாய், தந்தை உறவினர்கள் ரீதியாக பண உதவிகள் கிடைக்கும்.

குழந்தைப் பாக்கியம் எதிர்பார்த்து இருப்போருக்கு காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்பட்டுக் காணப்படுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.