சிம்மம் செப்டம்பர் மாத ராசி பலன் 2018!

அன்புள்ள சிம்மம் ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் சமயோஜித புத்தியால் சாதித்து காட்டும்  மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிநாதன் சூரியன் ஆட்சி பலம் பெற்று சிம்மம் ராசியில் இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும். தள்ளி போன காரியங்கள் தங்கு தடையில்லாமல் முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை அமையக்கூடும். அரசு காரியங்கள் சாதகமாக முடிவடையும். வீண் விரயங்களில் இருந்து விடுபடுவீர்கள். வருங்காலத் திட்டம் ஒன்று நிறைவேறும்.

சவாலான வேலைகளை மிக எளிதில் முடித்து காட்டுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல்  போகாது. உங்களிடம் கொடுக்கின்ற பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரம், தொழிலில் கணிசமான லாபத்தை பெறுவீர்கள். பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் சனி இப்பொழுது வக்ர நிவர்த்தியாகி இருப்பதால் எதிரிகள் விலகுவர். பூர்விக சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரக்கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

புதன் – சூரியனோடு இணைந்து புத ஆதித்ய யோகம் உருவாகிறது.  புதிய பொறுப்புகள் தேடி வரக்கூடும். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

செப்டம்பர் 15-ம் தேதி புதன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். செப்டம்பர் 6-ம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் அமையக்கூடும்.. பிரிந்த சகோதரர் மீண்டும் இணைவார்கள்.

சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் இளமை, அழகு கூடும். சோர்வு, களைப்பு நீங்கி புதிய உற்சாகத்துடன் செயல்பட தொடங்குவீர்கள். சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் குருவுடன் இணைந்து இருப்பதால் யோகமான நேரமாகும். கல்யாண பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்த அதிக முயற்சிகளை எடுப்பீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment