சிம்மம் புரட்டாசி மாத ராசி பலன் 2022!

இராசியின் மீது குரு பார்வை விழுவதால் பொருளாதார மேன்மை மிகுந்து காணப்படும், குடும்பத்தில் சந்தோஷம் தாண்டவமாடும். 3 ஆம் இடத்தில் உள்ள கேது, அளப்பரிய நன்மைகள் செய்யவுள்ளார்.  வண்டி, வாகனங்களால் ஆதாயப் பலன் கிட்டும். அசையாச் சொத்துகள் வாங்குவீர்கள்.

6 ஆம் இடத்தில் உள்ள சனி பகவான் விபரீத இராஜ யோகங்களைத் தருவார். 8 ஆம் இடத்தில் குரு பகவான் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து அனுகூலங்களை அள்ளிக் கொடுப்பார்.

9 ஆம் இடத்தில் உள்ள ராகு வெளிநாடு, வெளியூர் என பல ஆதாயப் பலன்களைக் கிடைக்கச் செய்வார். தொழில்ரீதியாக உற்சாகமான காலகட்டமாகவும், வேலைக்குச் செல்வோருக்கு முன்னேற்றமான காலகட்டமாகவும் இருக்கும்.

செலவினங்கள் ஏற்பட்டாலும் சுப செலவுகளாகவே இருக்கும். கௌரவம், புகழ், செல்வாக்கு என மிக்கு வாழ்வீர்கள். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும், பண வரவால் தங்கம், மனை, வீடு போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள்.

உடன் பிறப்புகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும். கணவன்- மனைவி இடேயேயான அன்பு அதிகரிக்கும், வீடு மாற்றம், வேலை மாற்றம் என நீங்கள் நினைத்த காரியங்கள் ஈடேறும், தாய் வழி தந்தை வழி சொந்தங்களால் அனுகூலங்கள் ஏற்படும்.

மாணவர்கள் கல்வி நலனில் மேம்பட்டுக் காணப்படுவார்கள். குல தெய்வத்தின் ஆசி பெற்று சிறப்பான வாழ்க்கையினை வாழ்வீர்கள். எதிரிகளை ஓட ஓட விரட்டுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.