சிம்மம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

2 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் உள்ளனர்.  வேலைவாய்ப்பு ரீதியாக எந்தவொரு குறையும் இல்லாமல் சிறப்பானதாகவே இருக்கும். தாமதம் ஏற்பட்டாலும் பதவி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்தும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

தொழில்ரீதியாக லாபம் இருக்கும், பணவரவு அதிகரித்தே காணப்படும். தொழில் கூட்டாளிகளுடனான கூட்டு முயற்சி வெற்றியினைக் கொடுக்கும். அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள், வீடு, மனை போன்றவற்றில் சேமிப்பினைச் செய்வீர்கள்.

பூர்விகச் சொத்துகள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கையில் வந்து சேரும். திருமணம் சார்ந்த காரியங்கள் தள்ளிப் போகும்.

குடும்ப வாழ்க்கையில் காரசாரமான விவாதங்கள் ஏற்படும், பொறுமையுடன் கையாண்டால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோர்மீது கூடுதல் அன்பு பாராட்டுவார்கள். மாணவர்கள் கல்வி நலனில் மேம்பட்டு இருப்பார்கள். தாய், தந்தை ஆதரவு அதிகமாகவே இருக்கும்.

தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கப் பெறும். உடல் நலனில் ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் சரியாகி மன மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews