சிம்மம் மார்கழி மாத ராசி பலன் 2022!

ராசிநாதன் 5 ஆம் இடத்தில் உள்ளார், 2 மற்றும் 4 ஆம் இடத்தை குரு பகவான் பார்க்கிறார். பல விதங்களில் யோகங்களைத் தரும் மாதமாக மார்கழி மாதம் இருக்கும்.

சனி பகவான் 6 ஆம் இடத்தில் இருந்து விபரீத ராஜபலனைக் கொடுக்கப் போகிறார். 8 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார். கௌரவம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்து அதிகரிக்கும்.

குடும்பத்தில் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி அதிகரித்துக் காணப்படும். இளைய சகோதர, சகோதரிகளுக்கு உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும், மேலும் உடன் பிறப்புகளுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

சொந்த வீடு வாங்கும் முயற்சியில் களம் இறங்குவீர்கள். அசையாச் சொத்துகள்மூலம் வருமானம் ஏற்படும். 6 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் வெற்றியினைக் கொடுப்பார். எதிரிகள் ஓடி ஒளிவர், கடன் சுமை குறையும்.

வேலைவாய்ப்புரீதியாக இடர்பாடுகள் இருக்கும். வாழ்க்கைத் துணை எதிர்ப்பாகப் பேசுவார்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும், 9 ஆம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், வேலையினைச் சிறப்பாக செய்து பாராட்டினைப் பெறுவீர்கள். வேலைவாய்ப்புரீதியாக இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு என ஆதாயங்கள் நிறைந்த மாதமாக இருக்கும்.

சிவபெருமானை வழிபாடு செய்து வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.