சிம்மம் மார்ச் மாத ராசி பலன் 2023!

8 ஆம் இடத்தில் குரு பகவான்- சுக்கிரன் இணைந்து உள்ளனர். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருந்து 11 ஆம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்ய உள்ளார். சிம்ம ராசியினைப் பொறுத்தவரை கடுமையான போட்டி, போராட்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

வேலைவாய்ப்புரீதியாக பெரிய அளவில் இடையூறுகள், வேலைப் பளு எனப் பல பிரச்சினைகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளுடன் கடும் எதிர்ப்பு இருக்கும், சக பணியாளர்களின் அனுசரணை இருக்காது.

தொழில்ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்; ஆனால் பணப் புழக்கம் சிறப்பாக இருந்தாலும் அபிவிருத்தி செய்தல் போன்ற விஷயங்கள் ரீதியாக பணம் செலவாகிவிடும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன் உறுதியானாலும், தள்ளிப் போக வாய்ப்புண்டு. குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான தவறான புரிதலால் பிரச்சினைகள் ஏற்படும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம்ரீதியாக அஜாக்கிரதையால் பல உடல் தொந்தரவுகள் ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்களால் பொறுப்புகள் அதிகரிப்பதால் மன அழுத்தம் ஏற்படும். உடன் பிறப்புகளால் பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் ஏற்படும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.