சிம்மம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

6 ஆம் இடத்தில் உள்ள சனி பகவான் 7 ஆம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி அடைகிறார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும் காலமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் என நீங்கள் நினைத்த காரியம் ஈடேறும்.

தொழில்ரீதியாக தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சியினைச் செய்வீர்கள். மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்துக்குள் அடியெடுத்து வைப்பீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை முயற்சிகளைத் தயங்காமல் எடுக்கலாம். பெரிதளவில் எந்தவொரு கோள்களும் இடையூறு செய்யாது. செவ்வாய் பகவான் 10 ஆம் இடத்தில் இருந்து சாதகப் பலன்களையே கொடுப்பார்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே போட்டிகள் ஏற்படும், விட்டுக் கொடுத்துச் சென்றால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

மாணவர்களைப் பொறுத்தவரை கவனச் சிதறல்கள் கொண்டு இருப்பர். இதனால் படிப்பில் மந்தநிலை இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். மற்றொருபுறம் உங்களுக்கு குடும்பம் சார்ந்த பொறுப்புகள் அதிகமாகும்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை கண்டகச் சனிபகவானால் பெரிதளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கவனமாக இருத்தல் வேண்டும். பெரிய அளவிலான பணம் சார்ந்த முயற்சிகளை எடுக்கும்போது ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுதல் நல்லது.

உறவுகள் மத்தியில் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews