சிம்மம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

குரு பகவான் 8 ஆம் இடத்தில் உள்ளார், 13 ஆம் தேதி சூர்யன் – சுக்கிரன் – சனி ஆகிய கிரகங்கள் இணைந்து கூட்டணி அமைக்கின்றன. வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இடமாற்றம், பதவி மாற்றம், முன்னேற்றம் போன்றவைரீதியாக நேர்மறையான விஷயங்களே நடக்கப் பெறும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும். சனி பகவான் கணவன்- மனைவி உறவைச் சோதிப்பார்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடைகள் ஏற்படும், எதிர்பார்த்த வரன்கள் அமைந்தாலும் தட்டிப் போகும் வாய்ப்புகள் அதிகமாகும். மாணவர்களைப் பொறுத்தவரை கோள்களின் நகர்வு என்று கொண்டால் செவ்வாயின் பார்வை சிறப்பாக உள்ளது.

எதிர்காலத் திட்டங்களைத் தீட்டலாம், சனி பகவான் குழப்பங்களை ஏற்படுத்துவார், அதனால் பெற்றோர், ஆசிரியர் அறிவுரைகளைக் கேட்டு முடிவுகளை எடுங்கள்.

எந்தவொரு புது விஷயத்தினைச் செய்யும்போதும் கடின உழைப்பினைப் போடும்படியாக இருக்கும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை வேலைப்பளு அதிகமாகும். குழந்தைகள், மாமியார்- மாமனார் ரீதியான பொறுப்புகள் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம்ரீதியாக மருத்துவச் செலவுகள் ஏற்படும். மேலும் தாயின் உடல்ரீதியாக கவனம் செலுத்துதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.