சிம்மம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

8 ஆம் இடத்தில் குரு பகவான், 6 ஆம் இடத்தில் சனி பகவான், 10 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் என கோள்களின் இட அமைவு உள்ளது.

5 ஆம் இடத்தில் சூர்யன்- சுக்கிரன்- புதன் என கோள்கள் இணைந்து காணப்படுகின்றது. அனைத்துக் கோள்களும் ராகு-கேதுவுடன் இல்லாததால் சிம்மத்திற்கு டிசம்பர் மாதம் சிறப்பான மாதமாக இருக்கும்.

மேலும் அனைத்துக் கோள்களும் கேந்திர கோணத்தில் இல்லை. வேலைவாய்ப்புரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியினைக் கொடுக்கும். தொழில்ரீதியாகவும் அபிவிருத்தி, புதுத் தொழில் துவங்குதல் என தொட்ட காரியங்கள் துலங்கும் மாதமாக இருக்கும்.

பரிபூரண சாதகமான மாதமாக டிசம்பர் மாதம் இருக்கும். 8 ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் பணரீதியான சிறு பிரச்சினைகள் மட்டும் இருக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன் கைகூடி வரும்பட்சத்தில் திருமணத்தை விரைவாக நடத்தச் செய்யலாம்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே புரிதல் அதிகமாக இருக்கும், மேலும் உணர்வுப்பூர்வமாக அன்பு அதிகரித்துக் காணப்படுவர்.

ஆரோக்கியம்ரீதியாக எந்தவொரு கோளாறும் இல்லாமல் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். இல்லத்தரசிகளைப் பொறுத்தமட்டில் மனநிறைவான மாதமாக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை எதிர்காலம் குறித்த திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுக்கலாம். அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். வண்டி, வாகனங்கள் வாங்குவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.