சிம்மம் அதிசார கும்ப சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

உங்கள் ராசிக்கு சனி பகவான் ஏழாம் இடத்திற்கு வருகிறார். இதற்கு கண்ட சனி என்று பெயர்.

இதுவரை இருந்து வந்த எளிமையான முறையிலான வாழ்க்கை முறை படிப்படியாக உங்களுக்கு மாற துவங்கும். வேலைப்பளு அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சிறு சிக்கல்கள் மட்டுமே வரும்.

இந்த வருடம் முதல் நீங்கள் அசைவம் சாப்பிடுவதைகண்டிப்பாக நிறுத்த வேண்டும். மது அருந்துவதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். அதன் பிறகு சனி பகவானின் குரு என்று சொல்லக்கூடிய காலபைரவர் பெருமானை வழிபட ஆரம்பிக்க வேண்டும் .

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் உங்கள் ஊரில் உள்ள காலபைரவர் பெருமான் சன்னதிக்கு சென்று அஷ்டமி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். காலபைரவரை தேய்பிறை அஷ்டமி வழிபட்டால் சனி பகவானால் ஏற்படக்கூடிய துயரங்கள் பெருமளவு குறைந்து விடும்.

ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபட்டால் கர்மவினைகள் குறையும். அதே சமயம் வருமானம் படிப்படியாக பெருக துவங்கும். கடன்கள் இருந்தால் அது தீர்வதற்கான வழிமுறைகள் உங்களுக்கு கிடைக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த வருடம் முழுவதும் பின்வரும் ஜென்ம நட்சத்திர பைரவ மந்திரத்தை 108 முறை எழுதி வர வேண்டும்

’ஓம் ஹ்ரீம் பம் பீஷண பைரவாய நமஹ’

இந்த வருடம் முழுவதும் நீங்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, மது அருந்துவதை நிறுத்தி இந்த பைரவ மந்திரம் எழுதி வருவதன் மூலமாக சனி பகவானால் உண்டாகக்கூடிய துயரங்கள் மிகச் சிறிய அளவுக்கு குறைந்து விடும் அல்லது பைரவரின் வாகனமாக போற்றப்படும் தெரு நாய்களுக்கு தினமும் உணவு தானம் செய்து வர வேண்டும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பின்வரும் ஜென்ம நட்சத்திர பைரவ மந்திரத்தை தினமும் 108 முறை எழுதி வர வேண்டும்.

’ஓம் ஹ்ரீம் பம் ருரு பைரவாய நமக’

இந்த வருடம் முழுவதும் இந்த மந்திரம் எழுதுபவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது. மது அருந்தக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை பின்பற்ற இயலாதவர்கள் இந்த மந்திரம் எழுதவோ, ஜெபிக்கவோ கூடாது அல்லது பைரவரின் வாகனமாக இருக்கும் தெரு நாய்களுக்கு தினமும் பிஸ்கட் அல்லது பொறை அல்லது சைவ உணவு தானம் செய்ய வேண்டும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பின்வரும் ஜென்ம நட்சத்திர பைரவ மந்திரத்தை தினமும் 108 முறை எழுதி வர வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. மது அருந்தக்கூடாது.

’ஓம் ஹ்ரீம் பம் ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ’

அல்லது பைரவரின் வாகனமாக இருக்கும் தெரு நாய்களுக்கு தினமும் அன்னதானம் செய்து வருவது நன்று.

மேலே பிறந்த மூன்று நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர்கள் மேலே கூறிய பைரவ வழிபாடு ஒன்றுகூட செய்ய இயலாதவர்கள் மாதம் ஒருமுறை உழவாரப்பணி செய்து வரலாம் அல்லது நீங்கள் வாழ்ந்து வரும் இடத்தில் உள்ள ஜீவசமாதிக்கு சென்று அங்கே உடல் உழைப்பு தாருங்கள். இதன் மூலமாகவும் உங்களுக்கு சனி பகவானால் உண்டாகக்கூடிய அலைச்சல்கள், சிக்கல்கள் பெருமளவு குறைந்து விடும்.

இந்த வருடம் முழுவதும் ஆடம்பரச் செலவை தவிர்க்கவும் சிக்கனமாக இருக்கவும். இந்த வருடம் முழுவதும் கையில் ரொக்க இருப்பு வைத்துக் கொள்வது நல்லது.

சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.