சிம்மம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசியினைப் பொறுத்தவரை சனி பகவான் 7 ஆம் இடத்தில் ஆட்சி பெற்று உள்ளார், சுக்கிரன் 10 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். கேது 3 ஆம் இடத்தில் உள்ளார். சனி பகவான், குரு பகவான், புதன், சூர்யன் என அனைத்துக் கோள்களும் ஏப்ரல் மாத பிற்பாதியில் உங்களுக்குச் சாதகமாக உள்ளது.

வேலைவாய்ப்புரீதியாக நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் மாதமாக ஏப்ரல் மாதம் உங்களுக்கு இருக்கும். நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறும், உடல் ஆரோக்கியம் ரீதியாக இருந்த தொந்தரவுகள் சரியாகும்.

மேலும் பொருளாதார ரீதியாக பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். எதிர்பார்த்த வரன் கைகூடும்; மேலும் திருமண காரியங்கள் விறுவிறுவென நடக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே இருந்த மனக் கசப்புகள் சரியாகும். குடும்ப உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வர்.

வீடு வாங்குதல், மனை வாங்குதல் போன்ற உங்களின் நீண்ட கால ஆசையினை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பழைய வண்டி, வாகனங்களை மாற்றி புது வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக மிகவும் தெளிவான சிந்தனையுடன் இருப்பார்கள். தாய்வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும்; நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews