சிம்மம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

சிம்ம ராசியினைப் பொறுத்தவரை ராசிக்கு அதிபதியான சூர்யன் 3 ஆம் இடத்தில் நீச்சம் பெற்றுள்ளார், அதனால் பலம் குறைந்தவராக இருப்பீர்கள். உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எந்த செயலைச் செய்வதாக இருந்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுதல் நல்லது.

யோசிக்காமல் செய்யும் காரியங்கள் தோல்வியில் முடிவடையும். புத்திசாலித்தனத்துடன் பேசி எந்தவொரு நிலையினையும் சமாளிப்பீர்கள். ராசிக்கு 3 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன், கேது உள்ளது. உடன் பிறப்புகளால் நன்மைகள் ஏற்படும்.

செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பூர்வீகச் சொத்துகள் ரீதியாக லாபம் ஏற்படும். சுபச் செலவுகள் ஏற்படும், மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கப் பெறும்.

ராசிக்கு 6 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் தொழில்துறை ரீதியாக இருந்த கடன் குறையும். உங்களுக்கு வந்துசேர வேண்டிய பணம் வசூலாகும். மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. தந்தைக்கு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.

தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்யலாம், தொழில்ரீதியாக கஷ்டப்பட்டாலும் ஆதாயங்கள் உங்களைத் தேடி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள்மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும்.

பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.