சிம்மம் ஆவணி மாத ராசி பலன் 2018!

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் திறமை பளிச்சிடும் மாதமாக இருக்கும். மாத தொடக்கத்தில் சூரியன் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் வேலை சுமை அதிகரிக்கும். மாதம் பிற்பகுதியில் சூரியன் ஆட்சி பலம் பெற்று உங்கள் ராசிக்கு வரும்போது திறமை பளிச்சிடும். இந்த ஆவணி மாதத்தில், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், கேது சாதகமாக இருப்பதால் நற்பலன்களைக் கொடுப்பர்.

இதுவரை உங்களுக்கு பல வித இன்னல்களை கொடுத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள். சகோதரர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். சகோதர, சகோதிரியிடம் ஆதரவு கிட்டும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். பல முறை முயற்சி செய்தும் எவ்வித பலன்களும் கிடைக்க வில்லையே என்று கவலை கொண்டு இருப்பவர்களுக்கு மாற்றங்கள் நிகழும்.

உங்கள் ராசிக்கு குரு பகவான் மூன்றாம் இடத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது விசேஷ பார்வையால் இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். சுக்கிரனால் ஆடம்பர வசதி பெருகும். குடும்ப தேவைகள் பூர்த்தி செய்வீர்கள். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகு இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு வேலை சம்மந்தமாக வெளியூர் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டி வரக்கூடும்.

ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு மாற்றங்கள் நிகழும். உங்களுக்கு வருகின்ற பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் நேரத்திற்கு முடித்து விடுங்கள். வியாபாரம், தொழில், சுய தொழில் செய்கின்றவர்களுக்கு முனேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்பொழுது நடைபெறும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment