சிம்மம் ஆடி மாத ராசி பலன் 2022!

சூர்யபகவான் 12 ஆம் வீட்டில் இருப்பதால் ஏற்கனவே இருக்கும் கஷ்டங்களில் இருந்து உங்களை விடுவிப்பார்.

சிம்ம ராசிக் காரர்கள் என்றாலே தைரியசாலி என்பவர்கள் என்பதுபோய் கடந்த சில மாதங்களாக தொடர் தோல்விகளால் மனதளவில் சோர்வுற்றவராக இருந்திருப்பீர்கள்.

ஆடி மாதம் உங்களை கடுமையான காலகட்டத்தில் இருந்து மீட்கின்றது. திடீர் பண வரவுகள் காணப்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும். மந்தநிலை தொழில் ரீதியாக நீடித்தாலும், இதுவரை இருந்த விரயச் செலவுகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.

கொடுக்கல் வாங்கல்ரீதியாக முந்தைய மோசமான காலத்தை கடப்பீர்கள். மேலும் வேலை பார்ப்போர் என்று எடுத்துக் கொண்டால் பணிச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான உறவில் பிரச்சினைகள் எழும். புதிதாக வேலை தேடுபவருக்கு வேலை கிடைப்பது கடினமாக இருக்கும்.

வெளிநாடுகளில் வேலை பார்ப்போருக்கும் வேலைகளில் சிக்கல்கள் இருக்கும். சரியான முடிவினை நிதானமாக எடுத்தால் மட்டுமே பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

திருமணம் சார்ந்த காரியங்களில் அலைச்சல் அதிகமாகவே இருக்கும். இந்த ஒரு மாதத்திற்கு புது வரன்கள் எதையும் பார்க்காமல் இருப்பது நல்லது. மேலும் வண்டி, வாகனங்கள் வாங்குவதில் தடைகள் வரும். கணவன்- மனைவி இடையேயான பல மாதப் பிரச்சினைகள் சரியாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.