Connect with us

சிம்மம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

Rasipalan

சிம்மம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள சிம்மம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் சுப செலவுகள் ஏற்படுகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் சூரியன் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் சுப செலவுகள் ஏற்படக்கூடும். ஒரு சிலர் வீட்டிற்கு தேவையானப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுக்கிரன் மாத தொடக்கத்தில் உங்கள் ராசியில் இருப்பதால் இளமை கூடும், பேச்சில் வசீகரம் உண்டாகும். ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சாரம் செய்தாலும் மாதம் முழுவதும் பலன் தருவார்.

உங்கள் ராசிக்கு குரு, சனி, ராகு, புதன், சூரியன் நன்மைகள் தர இயலாதவர்களாக இருக்கின்றார்கள். உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது 6-ம் இடத்தில் வலுவுடன் இருப்பதால் பல்வேறு விதத்தில் உங்களுக்கு நன்மைகள் ஏற்படக்கூடும்.முக்கியமான கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கேது, செவ்வாய் ஆறாம் இடத்தில் உச்சமாக இருப்பதால் தொட்டது துலங்கும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படக்கூடும்.

இந்த ஆடி மாதம் முழுவதும் சூரியன் கடகத்தில் ராகுவுடன் இணைந்து இருப்பதால் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக ஏற்படக்கூடும். குடும்பச்சுமை கூடுதலாக இருக்கக்கூடும். பயணங்கள் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். ஒரு சில நேரத்தில் நீங்கள் நன்மைகள்  செய்தாலும்  அது பிறர் கண்களுக்கு தீமையாக தெரியக்கூடும். வீண் விரயங்கள் அதிகமாக ஏற்படாமல் இருக்க அதனை சுப விரயங்களாக மாற்றி கொள்ளலலாம். வீட்டை விரிப்படுத்துவது, பழுதான வாகனம் சரி செய்வது, வீட்டிற்கு தேவையானப் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். தன்னம்பிக்கை, துணிவு, உற்சாகம் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள். திட்டமிட்ட காரியங்கள் கடைசி நேரத்தில் நல்ல விதமாக முடிவடையும்.

சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால் கணவன் மனைவி இடையே தோன்றிய கருத்து  வேறுபாடுகள் மறையக்கூடும். இதுவரை உங்கள் பிள்ளைகளுக்காக எடுத்த முயற்சி வீண் போகாமல் நினைத்தபடியே கைக்கூடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top