Connect with us

லக்னோவில் தயாராகும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்த்தின் இரண்டாம் பாகம் !

simbu 1 2 1

பொழுதுபோக்கு

லக்னோவில் தயாராகும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்த்தின் இரண்டாம் பாகம் !

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறை இணைந்து நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு .இந்த படத்தில் சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.

இந்த படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சிம்புவின் கேரக்டர் முற்றிலும் மாறுபட்ட கேரக்டராம். மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.

newproject 2022 07 29t201455 473 1659105990

இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானியும், ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.சிம்புவின் இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீடு செப்டம்பர் 1 ஆம் தேதி வேல்ஸ் காலேஜ்ல் நடைபெற உள்ளது, தற்போழுது அதற்கான வேலை முழி ஈடுபாட்டில் நடை பெற்று வருகிறது.

சிம்புவின் பாத்து தல படத்தில் கெளதம் மேனன் கெட்டவரா? வெளியான கலக்கல் அப்டேட் !

20 1424412801 gautham menon with simbu 60 1661092700

இந்நிலையில் இந்த படத்தின் மாற்றிய மாசான தகவல் வெளியாகியுள்ளது. படத்தை எடிட் செய்த பிறகு படமாக்கிய ஒரு ஆக்சன் காட்சி திருப்தியாக இல்லாத காரணத்தினால் அந்த சண்டை காட்சியை படமாக்க சிம்பு, கவுதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் லக்னோவில் முகாமிட்டுள்ளனர்.

மேலும் வெந்து தணிந்தது காடு படம் இரண்டு பாகங்களாக உருவாக்க இருப்பதாகவும் அதற்காக காட்சிகளே தற்போழுது லக்னோவில் படமாக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top