Connect with us

டி.ஆர் உடல்நிலை பற்றி சிம்பு கொடுத்த அப்டேட்!!..

TRajendar 750

பொழுதுபோக்கு

டி.ஆர் உடல்நிலை பற்றி சிம்பு கொடுத்த அப்டேட்!!..

பிரபல இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்திரன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளர் என்று அனைவருக்குமே தெரியும். தமிழ் சினிமாவில் நடிப்பு,இயக்கம்,தயாரிப்பு வசனம்,இசை என பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் டி ராஜேந்தர். 1980களில் இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அதோடு தனது படங்களில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர்.

jpg 4

சினிமாவில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் அவர் ஆர்வம் செலுத்தி வந்தார். கடந்த 2004ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு சிறுசேமிப்பு திட்டத்தில் துணை தலைவர் ஆக்கப்பட்டார். ஆனால் அந்த பதவியை அவர் ராஜினாமா செய்தார் என நிலையில் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

67 வயதான டி.ராஜேந்தருக்கு கடந்த சில தினங்களுக்கு முன், நெஞ்சு வலி இருந்ததாகவும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. அவர் 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை கொடுத்து வருவதாக தெரிவித்தனர். தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆண்டவரிடமும் வேலை காட்டிய அனிருத்!!.. செம கடுப்பில் கமல்!!..

இந்நிலையில், டி.ராஜேந்தர் உடல் நிலை குறித்து நடிகர் சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட, அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top