நடிகர் சிம்புவின் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும் பிசியாக அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் சிம்பு .
அடுத்ததாக ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘பத்து தல’. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படம் கௌதம் கார்த்தி போலீஸ் அதிகாரியாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அளவிற்கு கதை அமைந்துள்ளது.
சமீபத்தில் அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்த டீஜய் அருணாச்சலம் இந்த படத்தில் இறுதி ஷெட்யூலில் இணைந்துள்ளதாக தகவல்வெளியானது .இந்நிலையில் இந்த படத்தின் சுவாரசியமான தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது,
விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா! தேதி எப்போ தெரியுமா !
இயக்குனர் கௌதம் மேனன், பத்து தல படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் இயக்குனர் கௌதம் மேனன் கலந்து கொண்டார். அப்போது இந்த தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
மேலும் பத்து தல திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகயுள்ளது குறிப்பிடத்தக்கது.