மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.ஆனால் சமீபத்தில் அவரது அப்பா இயக்குனர் மற்றும் நடிகருமான டி ராஜேந்திரன் அவர்களில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் படத்தில் அப்டேட்களை வெளியிடமுடியாத நிலை இருந்தது.
தற்பொழுது அவர் புராணநலம் பெற்று வருவதால் சிம்பு படங்களின் வெளியீட்டுத் தேதி அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகிறது. முதலில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படம்.இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஹன்சிகாவின் 50வது படமான மஹா படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது மஹா திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்பு பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.
தற்போழுது ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘பத்து தல’. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் 22 வது படத்தின் ஹீரோயின் யாரு தெரியுமா?